நாவற்குழியில் வாள் வெட்டு;இளைஞன் படுகாயம்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 19/11 சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நாவற்குழி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞனை  வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதில் நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 31வயதான சுஜேன் என்ற இளைஞனே கையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.குறித்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்