பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு – வரவேற்க சென்ற அதிகாரிகள்

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக (21ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தனர்.

கண்டி, பெந்தோட்டை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று இந்தப் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் அமைப்பை அவதானித்த பின்னர், இக்குழுவினர் பிரான்சிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க உள்ளனர்.

 பயண முகவர்கள்

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு - வரவேற்க சென்ற அதிகாரிகள் | Travel Agents From France Come To Sri Lanka

 

இந்த பயண முகவர்கள் குழு (21ஆம் திகதி) காலை 07.25 மணியளவில் பிரான்ஸ் பிராங்போர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கா சென்ற அதிகாரிகள்

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு - வரவேற்க சென்ற அதிகாரிகள் | Travel Agents From France Come To Sri Lanka

 

இந்தக் குழுவை வரவேற்பதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சுற்றுலா ஹோட்டல்கள், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவை நிறுவனங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்