5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா..! வெளியான அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

நிதி ஒதுக்கீடு

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா..! வெளியான அறிவிப்பு | 5 000 Stipend For Low Income Families

குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு, இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.