நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

                  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.