V8 சுப்பர் ஜீப் கேட்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர்

தமக்கு V8 சுப்பர் ஜீப் ஒன்றை வழங்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டொக்டர் சீதா அரம்பேபொலவிடம் தற்போது பென்ஸ் ரக கார் மற்றும் பி. எம். டபிள்யூ கார் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு வாகனங்கள் தவிர, இந்த வி8 வகை சூப்பர் காரை அவர் கோரியுள்ளார் .
தற்போது இந்த வாகனத்தை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) டொக்டர் லக்ஷ்மி சோமதுங்க பயன்படுத்துகின்றார். ஜீப்பை இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொலவுக்கு வழங்க மேலதிக செயலாளர் மறுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கம் பதவி விலகியதன் பின்னர், சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும், இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய கார்களை இரண்டை மேலதிக செயலாளர்கள் பயன்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

V8 ரக காரை பெற்றுக்கொள்வது தொடர்பாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

முன்னதாக, இராஜாங்க அமைச்சர் குடை கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.