மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

சுற்றுலா வீச மூலம் மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமனன்றில் 2023 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு விவாத உரையின் போதே சமர்ப்பித்திருந்தார்.

மேலும், இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஒருவருக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

 

அழைத்து வருவதற்கான செலவு

மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு | Srilanka Immigration Department Manusha Nanayakara

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பணியகத்தின் அனுமதியில்லாமல் சென்றவர்களில், ஓமானில் 77 பெண்களும் துபாயில் 77 பெண்களும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அழைத்து வருவதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையின் ஊடாக பெறப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களை அழைத்து வருவதற்கு முன்னர், குற்றப்புலனாய்வுத்துறையினரை அங்கு அனுப்பி அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து, குற்றம் புரிந்தோரை கண்டுபிடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

சட்ட விரோத செயற்பாடு

மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு | Srilanka Immigration Department Manusha Nanayakara

இந்த நிலையில் சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்று அங்கிருந்து எல்லையின் ஊடாக ஓமானுக்கு பெண்களை அழைத்துச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 190 பெண்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோதும், சட்டத்தரணிகளின் முயற்சிகளால் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பெண்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஓமானுக்கு சட்ட விரோதமான வகையில், அனுப்பும் செயற்பாடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, அபுதாபியின் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் குஷான் என்ற அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுளடளார்.

அவர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும்”என தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.