தேயிலை இலைகளுடன் கலந்ததாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருள் தொடர்பில் விஷேட விசாரணைகள்

தேயிலை இலைகளுடன் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வகை இரசாயனப் பொருள் தொடர்பில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


கடந்த மாதம் 21 ஆம் திகதி தினியாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் இருந்து 2000 கிலோ இரசாயனப் பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இரசாயனப் பொருட்களை லொறியில் ஏற்றிச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். தேயிலைத் தூளில் இரசாயனப் பொருட்களைக் கலக்க சந்தேக நபர்கள் எடுத்துச் செல்ல முற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் அறிக்கையின்படி, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்