வேலை தேடி விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: தாரக பாலசூரிய

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விசிட் விசாவுடன் பயணிக்க வேண்டாம் என வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முறையான வேலை விசா மற்றும் வேலை வாய்ப்பு பெற்று அந்த நாடுகளுக்கு செல்லுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகச் சென்று வேலையில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்த நாடுகளில் இருந்து அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அமைச்சு நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையை குறிப்பிடுகையில், அந்த மக்கள் நாட்டிற்கு திரும்பி வர விரும்பவில்லை என்றார்.

“எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கலந்துரையாடலில் உள்ளன. என்று அவர் கூறினார்.

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு விசிட் விசா மூலம் நுழைய அனுமதிக்கும் வகையில் தங்கள் சட்டங்களை தளர்த்தியுள்ளன, அதை வேலை கிடைத்த பின்னர் வேலை விசாவாக மாற்றலாம்.

எவ்வாறாயினும், விசிட் வீசாவுடன் பயணிக்க வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முறையான பணி விசா பெற்று அந்த நாடுகளுக்கு செல்லுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்