ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும் தரையில் அமர்ந்தும் கல்வியை கற்கும் அவலநிலை? இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதி கஜரூபன் கருத்து

ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும், தரையில் அமர்ந்தும் கல்வியை கற்கும் அவலநிலை? இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதிநிதி கஜரூபன் கருத்து.

ஒரு மாணவர் அமர வேண்டிய ஆசனத்தில் இரு மாணவர்கள் அமர்ந்து கொண்டும் ,சில வேளைகளில் தரையில் அமர்ந்து கொண்டும் கல்வி கற்கின்ற அவல நிலை இங்கு நிலவுகின்றது. இதனை அரசியல்வாதிகள் முதல் கல்வி அதிகாரிகள் வரை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். என்று இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதிநிதி லோகநாதன் கஜரூபன் கருத்து தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இணைந்த கரங்கள் அமைப்பினால் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் கல்விகற்கும் 68 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று (19) சனிக்கிழமை பாடசாலையின் பிரதி அதிபர் கணேசன் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

அவர் அங்கு மேலும் கூறுகையில்..

கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்தில் உள்ள புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்கள்
அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் பாடசாலைக்கு வருகை தருபவர்களாக காணப்படுவதுடன் இக் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழிலான தோட்டத் தொழிலையே நாளாந்தம் நம்பி இந்த மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர்.

இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது பயணத்தின் நோக்கத்தையும் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் மகுடம் வாசகத்தினை சுமந்து செல்கின்றது.
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் கண்டி பிரதேசத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியேக வகுப்புக்களை பாடசாலையில் நடா த்துகின்றனர்.
மேலும் மாணவர்களுக்கு போதிய தளபாட வசதிகள் இல்லாத காரணத்தினால் ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும் தரையில் இருந்து கொண்டும் தனது வகுப்பைறையில் கல்வியினை கற்கின்றனர். இதனை சம்பந்தப்பட்டவர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ். திருஞானம், பாடசாலையின் பகுதி தலைவர்களான திருமதி.ஏம்.தவமலர், திருமதி.ஆர்.ஜெயகாந்தி, பேராதனை தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியைகளான தவராசா.பரணிதா, வெ.சானுஜா, கி.மிதுளா, வி.கஜந்தரி, செ.தர்ஷிகா, சி.லக்சனா, ரா.திவ்விகா மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன்,திரு. எஸ்.காந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இணைந்த கரங்கள் அமைப்பினரால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் உறவுகளினால் இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு லோ. கஜரூபன் திரு. எஸ். காந்தன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.