பிள்ளையின் கண் முன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தாய்

 

தனது பிள்ளையை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வரும் வழியில் குறித்த தாய் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொல்பித்திகம, தல்பத்வெவ பிரதேசத்தில் இருந்து இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்தப் பெண் தனது பிள்ளையுடன் வரும் வழியை மறித்த சந்தேக நபர் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்தப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சந்தேங்க நபருக்கும் தாயிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரைக் பொலிஸார் விசாரித்து வருகின்றனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்