ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், ​​ராஜபக்ச குடும்பத்திற்குள் சில காலமாக நிலவி வந்த குடும்பச் சண்டை முதன்முறையாக பொது வெளிக்கு வந்துள்ளது.

பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவிகளை வகிக்க முடியாது என்ற ஷரத்தும் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் இருந்தது.

சமல் ராஜபக்ஷ, ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச வாக்களிக்கவில்லை.

மறுபுறம், பசில் ராஜபக்ஷவுக்கும் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

 

சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் - சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச | Rajapakse Family Feud Has Resurfaced

இவ்வாறானதொரு பின்னணியில், அரசியல் பயணங்கள் முழுவதிலும் குரஹான் சால்வை அணிந்து வந்த சமல் ராஜபக்சவின் மகன் ஷசீந்திர ராஜபக்ச, இன்று முதல் தடவையாக குரஹான் சால்வை அணியாமல் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

ஷசீந்திர ராஜபக்ச தோளில் சால்வை அணியாமல் பொது இடங்களில் காணப்படுவது இதுவே முதல் முறை. மாறாக அவர் மேற்கத்திய உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

மகிந்த வழங்கிய சால்வை

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் - சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச | Rajapakse Family Feud Has Resurfaced

 

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஷசீந்திர ராஜபக்வுக்கு குரஹான் சால்வை வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஷசீந்திர முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டதுடன் அதே ஆண்டு அவர் ஊவா மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.