முப்பது மில்லியனை தின்று தீர்த்த விலங்குகள்

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 144,989 மெட்ரிக் தொன் நெல் மற்றும் 93 மில்லியன் தேங்காய்கள் உட்பட 28 உணவுப் பயிர்கள் காட்டு விலங்குகளால் அழிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விவசாயிகளின் சனத்தொகை – காடு விலங்கு மோதல்கள் பற்றிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது ,

வன விலங்குகளால் அழிக்கப்பட்ட உணவுப் பயிர்களின் பெறுமதி 30,215 மில்லியன் ரூபா என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ள , வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு, வன விலங்குகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் வன யானை-மனித மோதல்களைத் தடுப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமித்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற உத்தேசித்துள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.