புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் – பயணிகள் அருந்தப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்துது இன்று பிற்பகல் இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய கடமை மேலாளர் தெரிவித்தார்.

விமானத்தில் 41 பயணிகளும் எட்டு பணியாளர்களும் இருந்ததாக அவர் கூறினார். இது நியோ வகை விமானம் (ஏர்பஸ் 321), பிரான்சில் தயாரிக்கப்பட்டது.

 

மதுரைக்கு புறப்பட்ட விமானம்

புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் - பயணிகள் அருந்தப்பு | Srilankan Flight Lands Five Minutes After Take Off

இந்த விமானம் மதியம் 1.40 மணிக்கு மதுரைக்கு புறப்பட இருந்தது. எனினும் விமானம், மதியம் 02:02 மணிக்கு புறப்பட்டநிலையில் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மதியம் 02:07 மணிக்கு விமான நிலையத்திற்கு திரும்பியது.

 பழுதுபார்க்கப்பட்டு வரும் விமானம்

புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் - பயணிகள் அருந்தப்பு | Srilankan Flight Lands Five Minutes After Take Off

 

தற்போது விமானம் பழுதுபார்க்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திற்குள் தொடர்ந்து உள்ளனர். மதுரைக்கு விமானம் புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் இன்னும் அறிவிக்கவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்