தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்த 169 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த வருடத்திற்கு 169 மில்லியன் ரூபாவை சுற்றுலா மற்றும் காணி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி மிரிஜ்ஜவில, சீதாவாக்க , பேராதனை மற்றும் ஹக்கல போன்ற தாவரவியல் பூங்காக்கள் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அடுத்தாண்டு நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 மில்லியன் ரூபா செலவில் நாட்டில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தவும் வரவு -செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.