மகிந்த – மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம்

முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக அரச நிதியில் இருந்து செலவுசெய்த அதிபரின் மொத்த செலவினம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே விடுத்த கோரிக்கைக்கு அமைய தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக அதிபரின் மொத்த செலவினத்தில் 43 சதவீதத்தை பயன்படுத்தியதாகவும், முன்னாள் சிறிலங்கா அதிபர் மைதிரிபால சிறிசேன 57 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்குகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

மகிந்த - மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம் | Sri Lanka Mahinda Maithili Economic Crisis Report

மேலும் இந்த அறிக்கையில், “மகிந்த ராஜபக்ச 2010 முதல் 2014 வரை 630 மில்லியனுக்கும் அதிகமான செலவில் 2,578 பேர் கொண்ட தனிப்பட்ட ஊழியர்களை பனிக்கு அமர்த்தியள்ளார். மைதிரிபால சிறிசேன 2015 முதல் 2019 வரை ரூ.850 மில்லியனுக்கும் அதிகமான செலவில் (ரூ.850, 326,958.14) தனிப்பட்ட ஊழியர்களை பனிக்கு அமர்த்தியுள்ளார்.

அரிபர் செயலகத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவல்களில், இரண்டு அதிபர்களும் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக ரூபா 1480 மில்லியனுக்கும் (ரூ.1488, 434.900.00) செலவிட்டுள்ளனர்.

ஆட்சிக்கு வந்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்த்துக் கொள்வதாக மீண்டும் வலியுறுத்தியதன் மூலம், அதிக செலவில் தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதில் தமக்கு முன்பிருந்த அதிபர்களுக்கும்  செலவீனத்துக்கு மேலதிகமாக செலவு தொகையை பெற்றுள்ளார்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு பரீசீலனை

மகிந்த - மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம் | Sri Lanka Mahinda Maithili Economic Crisis Report

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே 2019 ஆம் ஆண்டு இது தொடர்பான விவரங்களை கோரியிருந்த போதிலும் செயலகம் அதனை நிராகரித்திருந்தது.

எவ்வாறாயினும், அதிபர் செயலகத்தின் தீர்மானத்திற்கு எதிரான மேன்முறையீட்டை பரிசீலித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் 2022 நவம்பர் 14 அன்று உரிய விவரங்களை வெளியிட நடவடிக்கை எடுத்தனர்.

அரச நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட எந்தவொரு உருவாக்கத்தையும் இவ்வாறே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர் லயனல் குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிதி வீணடிப்பு

மகிந்த - மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம் | Sri Lanka Mahinda Maithili Economic Crisis Report

 

மேலும்,”தலைவர்கள் தேசிய செல்வத்தின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தனிநபர் ஊழியர்களை பராமரிப்பதில் பாரியளவில் பொது நிதி வீணடிக்கப்படுவது பற்றி தெரியாது. இருப்பினும், குறைந்தபட்சம் வருங்காலத் தலைவர்களாவது இத்தகைய செலவினங்களை குறைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் வீண் செலவுகள் தவிர்க்க முடியாமல் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது உடனடியாக உணரப்படாவிட்டாலும், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு அனுபவிக்க நேரிடும் என்பது சிறிலங்கா இன்று எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தெளிவாகிறது.

குறிப்பாக ஆட்சிக்கு வந்த சிறிலங்கா தலைவர்கள் பெரும்பாலும் சொந்த பந்தப் போக்கை கடைப்பிடித்து தங்கள் அரசியல் நண்பர்களையும் உறவினர்களையும் முக்கிய பதவிகளில் நியமித்து அவர்களை ஊக்குவிதள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.