இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு – சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், பாரபட்சத்திற்கு எதிராக அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகயை மேற்கொண்டுவருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சர்வதேச மன்றமொன்றில் எடுத்துரைத்துள்ளார்.

காலனித்துவ காலத்தில் புகுத்தப்பட்ட பாகுபாடான இன, அரசியல் மற்றும் கலாசார அம்சங்கள் இன நல்லிணக்கத்தை அழிப்பதற்கு இட்டுச் சென்றதாக ஸ்ரீலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு - சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம் | Discrimination Against Tamils Sri Lanka People

 

மெக்சிகோவின் மெக்சிகோ நகரில் இடம்பெற்ற இனப் பாகுபாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ உலகளாவிய மன்றத்தின் அமர்வு கனடா மற்றும் ஃபோர்ட் அறக்கட்டளையின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கடந்த காலங்களில் நிலவிய கொவிட்-19 மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற பல தடைகளுக்கு மத்தியில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இனம், மொழி, மதம், கலாசாரம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களிடையே சமத்துவத்தைப் பாதுகாக்க அரசாங்கம் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில் அத்தகைய எந்தவொரு நபருக்கும் ஏற்படும் எந்தவொரு அநீதிக்கும் தீர்வை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு தடையற்ற அதிகாரம் உள்ளது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

செல்வந்த நாடுகள் முன்மாதிரி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு - சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம் | Discrimination Against Tamils Sri Lanka People

அரச சேவையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் மூலம் பாகுபாடுகளை தவிர்ப்பதற்கும் ஏற்பாடுகளை செய்யும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை இலங்கை அண்மையில் நிறைவேற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

பாகுபாட்டைக் களைவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்று திரள வேண்டும் என அழைப்பு விடுத்த நீதி அமைச்சர், மேலும் செல்வந்த நாடுகள் முன்மாதிரியாக இருப்பதன் மூலம் துடிப்பான பங்களிப்பை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காலனித்துவ ஆட்சியின் விளைவாக மிகப் பெரிய நிறுவனங்கள் ஏழை நாடுகளில் குழந்தைகளை சுரண்டியுள்ளதுடன், பிராந்தியங்களில் பாகுபாடு வேரூன்றியதாகவும் பல நாடுகளின் பிரதிநிதிகளால் இந்த மன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.