எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் – அமெரிக்கா ராணுவம் அதிரடி (காணொளி)

பி-21 

பி-21 ரைடர் என்ற பெயரில் எந்த ரேடாரின் கண்களிலும் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் ஒன்றை அமெரிக்கா ராணுவமான பெண்டகன் உருவாக்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னர் இருந்த விமானத்தை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

இந்த விமானம் எந்த ரேடாரின் கண்ணுக்கும் சிக்காமல் எதிரியின் எல்லைக்குள் சென்று அணுகுண்டு வீசும் வகையில் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய – சீன எல்லை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் புதிய விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.

பி-21 ரைடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானத்தை அறிமுகம் செய்யும் விழா, பாதுகாப்புடன் மிக சிலருக்கு மட்டுமே இந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அணு ஆயுத ஏவுகனை வீசும் விமானம்

 

இந்த விமான அறிமுக நிகழ்ச்சியில் அமெரி்க்கா ராணுவ அமைச்சகத்தின் செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேசியதாவது:

“இது வெறும் விமானம் மட்டுமல்ல. அமெரிக்கா விரும்பும் மக்களாட்சியை உறுதியுடன் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை. தானாக எல்லையை குறிவைத்து அணு ஆயுத ஏவுகனையை செலுத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த புதிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அச்சுறுத்தல் வரலாம், எந்த வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையிலான ராணுவ முன் தயாரிப்பு மிக முக்கியம் எனவும் தெரிவித்தார்.

 

 

 

அந்த வகையில் அமெரிக்காவின் இந்த புதிய அணு ஆயுத ஏவுகனை வீசும் விமானம் உலக நாடுகளால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சாதாரண கண்களால் பார்க்க முடியாது

Gallery

 

இந்த விமானத்தை நார்த்ரோப் கிரம்மான் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தேவையான நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் இந்த விமானத்தில் இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

தாழ்வாக பறக்கும் பொது இந்த விமானம் பறப்பதை உங்களாால் கேட்க முடியும். ஆனால் அதை சாதாரண கண்களால் பார்க்க முடியாது என்றும் பெண்டகன் தெரிவித்துள்ளது.

இதே போன்ற ஆறு புதிய விமானங்கள் உற்பத்தியில் இருப்பதாகவும், மேலும் 100 விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.