பொருளாதார நெருக்கடி- நாட்டைவிட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள்

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசின் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தை பெறுவோருக்கான வரி விதிப்பு காரணமாக வைத்திய நிபுணர்கள் உட்பட பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் தமது வீட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவில் சென்ற வண்ணமுள்ளனர்.ஏனையோர் தமக்கு வசதியான நாடுகளுக்கு சென்ற வண்ணமுள்ளனர்.

எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை

பொருளாதார நெருக்கடி- நாட்டைவிட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள் | Technical Professionals Leaving The Country

 

அந்த வகையில் சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக வெளியேறியுள்ளதாக இலங்கை கணனிச் சங்கத்தின் (CSSL) தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.

 

சுமார் 10 சதவீதமான மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு சந்தை

பொருளாதார நெருக்கடி- நாட்டைவிட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள் | Technical Professionals Leaving The Country

 

சுமார் 150,000 பேர் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடியாக அங்கம் வகிக்கின்றனர். 2021 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் சுமார் 125,000 பேர் என தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத்திற்கான வேலை வாய்ப்பு சந்தை வளர்ந்து வருவதால், சுமார் 10,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.