வடையில் கரப்பான் பூச்சி – மூடப்பட்ட கடை!

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிவன் கோவிலடி பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உள்ளுரைச் சேர்ந்த ஒருவர் வடைகளை கொள்வனவு செய்த போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வடைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று உண்பதற்கு தயாரான நிலையில் கரப்பான் பூச்சியொன்று இருப்பதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த கடைக்கு சென்று மேலதிக விசாரணைகளை நடத்தினர்.

இதன்போது மனிதபாவைனைக்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.