மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட‘யாளி’ திரைப்படம் கனடாவில் திரையிடப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திரைப்படத்தின் இயக்குனர் தெரிவிப்பு…

மட்டக்களப்பு கலைஞர்களினால் முழு பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ‘யாளி’ திரைப்படம் கனடாவில் திரையிடப்படுவதற்கான வாய்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குனர் டக்ஸ்ன் கிருஸ்ணா தெரிவித்தார்.
அண்மையில் ‘யாளி’ திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட்டிருந்த நிலையில் கனடாவில் குறித்த திரைப்படத்தினை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் இயக்குனர் டக்ஸ்ன் கிருஸ்ணா,கிரிஷிகா,படத்தின் தொகுப்பாளர் துஜா மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு திரைப்பட வெளியீடு தொடர்பில் கருத்துகளை வெளியிட்டனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் குறித்த யாளி திரைப்படத்தினை கனடாவில் வெளியீடுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இயக்குனர் டக்ஸ்ன் கிருஸ்ணா தெரிவித்தார்.
இதேநேரம் மட்டக்களப்பின் கலைஞர்கள் சமூக நோக்குடன் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தினை கனடாவில் வெளியீடுசெய்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்த திரைப்படத்திற்கான ஆதரவினi வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
தமது திரைப்படத்தினை வெளியீடுசெய்வதற்கு உதவிய அப்ளர் எச்டி கனடா உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதன்போது ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.