அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி – கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேறி செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கைகள் நேற்றைய தினம் (21.12.2022) வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிகபட்ச வரம்பு 25000 ரூபாவிற்கு உட்பட்டு பணம் செலுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நஸ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மேலதிக , கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் என திறைசேரி அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













கருத்துக்களேதுமில்லை