தென்மராட்சிப் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா.

சாவகச்சேரி நிருபர்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,தென்மராட்சிப் பிரதேச செயலக கலாசார பேரவை மற்றும் சாவகச்சேரி கலாசார மன்றம் ஆகியன இணைந்து நடத்திய தென்மராட்சிப் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா 19/12 திங்கட்கிழமை பிற்பகல் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபனும்,
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சி.இராஜமல்லிகை மற்றும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி சி.சுதோக்குமார் ஆகியோரும் மற்றும் கௌரவ விருந்தினராக கலாபூசணம் பொன் ஸ்ரீவாமதேவனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் சிறப்பம்சங்களாக கண்ணன் நடனம்,புல்லாங்குழல் இசை,திருப்புகழ் நடனம்,நாட்டிய நடனம்,குறத்தி நடனம்,கலைச்சாகரம் மற்றும் இளங் கலைச்சாகரம் விருது வழங்கல் நிகழ்வு,அன்னக்கிளி நாடகம்,கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு வைபவம் ஆகியன இடம்பெற்றன.
மேலும் நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன்,சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் பாலமயூரன்,விழா அனுசரணையாளர்கள், கலைஞர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலை இரசிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.