சீனாவிலிருந்து இலங்கை வழியாக தமிழகம் சென்ற இருவருக்கு கொவிட்!
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களின் கொவிட்-19 தொற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சீனா மற்றும் பிற வெளிநாடுகளில் கொவிட் தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் எந்த ஒரு அவசரகால சூழ்நிலையையும் தவிர்க்க இந்திய அரசு முன்னெச்சரிக்கை முறைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், சீனா தனது விமான நிலையங்களை முழுமையாக செயல்பட வைக்கும் வகையில் ஜனவரி 8 முதல் மூன்று ஆண்டுகாலப் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளது.












கருத்துக்களேதுமில்லை