பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்க காலமானார்

அவர் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவரும் சட்டம் தொடர்பில் விருது பெற்ற பேராசிரியருமான லக்‌ஷ்மன் மாரசிங்க காலமானார்.

மாரவில – வலஹாபிட்டியில் உள்ள பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்கவின் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை வலஹாபிட்டி பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், லண்டன் University College-இல் முதல் வகுப்பு சித்தியுடன் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்க, வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பில் விருது பெற்ற பேராசிரியராவார்.

யுத்த காலத்தின் போது சமாதான முன்னெடுப்புகளை ஒருங்கிணைப்பதற்காக செயலகத்தின் சட்ட பணிப்பாளராகவும் சர்வதேச ஆய்வுகளுக்கான பெம்பர்லி சர்வதேச மையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்க முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருமான ரோஹினி மாரசிங்கவின் கணவராவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.