வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு இன்று ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.(காணொளி இணைப்பு)

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு இன்று ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

வட கிழக்கு தமிழ் கட்சியை சேர்ந்தவர்களை நாட்டினுடைய ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக அழைப்பு விடுத்திருக்கின்றார் இந்நிலையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளை அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த பேச்சுவார்த்தையானது அமைய வேண்டும் எனவும் இவ்வாறன செயற்பாட்டை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வரவேற்பதாக ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி வைகுசராசா தெரிவித்தார்.மேலும் குறிப்பிடுகையில்

*தற்போதைய நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை ஒருமித்த வகையில் செயற்படவில்லை

*இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு பங்கம் விளைவிக்கும் ஜனநாயகம் அற்ற போக்காக அமையும் என்பதனை வருத்தத்துடன் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

*அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு ஒரே இலங்கைக்குள் ஒர் அணியில் திரண்டு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வினை பெற வலியுறுத்த வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.