ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தவர் கைது..

ஹெரோயின் போதைப்பொருளை  நீண்ட காலமாக  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  விற்பனையில்  ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரை வீதி  பகுதி மக்பூலியா சந்திக்கருகில்   சந்தேகத்திற்கிடமாக  நபர் நடமாடுவது தொடர்பில்   இரவு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தமைக்கமைய இச்சோதனை நடவடிக்கையை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டனர்.
இதன் போது பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை    சூட்சுமமாக விற்பனை செய்த   22 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து  1 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின்   போதைப் பொருள் விசேட அதிரடிப்படையினரால்  மீட்டுள்ளது.
 கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை    விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில்   பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க   உள்ளிட்ட  பொலிஸ் கன்டபிள்களான அமரசேகர (67810)  பிரசன்ன (90669) நிமேஸ்(90699) ஜெயவர்த்தன ( 94155 ) சாரதி ஜெயரட்ண  ( 19786) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்கள் யாவும்  பெரிய நீலாவணை     பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.