ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவப் பொருட்கள்.

சாவகச்சேரி நிருபர்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 09/01 திங்கட்கிழமை 752000.00 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 752000.00 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
இவ் உதவித் திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.