வெளிவிவகார அமைச்சர் -இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் சந்திப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) செயலாளர் நாயகம் ஹிஸைன் பிரஹிம் தாஹாவை சந்தித்துள்ளார்.


நேற்று (24) ஜித்தாவில் உள்ள OICஇன் தலைமைச் செயலகத்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் அவரது தூதுக்குழுவினர் வரவேற்கப்பட்டதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, OICக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக OIC கூறியது.

அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் நிலைமைகள் மற்றும் பொருளாதார மீட்சிக்காக தனது நாடு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து செயலாளர் நாயகத்துக்கு உறுதியளித்தார்.

இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினரின் நல்வாழ்வுக்கு OIC வழங்கும் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டினார்.

பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகளில் எதிர்காலத்தில் நெருக்கமாக பணியாற்றுவதற்கான நம்பிக்கையையும் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியதாக OIC மேலும் கூறியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.