தமிழரசு கட்சியின் திருகோணமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் -சுமந்திரன்

வடமலை ராஜ்குமாா்

இலங்கை சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு நாட்டின் தலைவர் ஒருவர் மக்கள் புரட்சியால் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் இது.அவ்வாறான முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்ற பின்னர் மக்கள் தமது கருத்துக்களை வாக்குகள் மூலம் தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இத் தேர்தல் நோக்கப்படுகின்றது..என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (10) திருகோணமலை வெருகல் பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் ச.குகதாசன் மற்றும் மாவட்டக்கிளை செயலாளர் க.செல்வராஜா பொருளாளர் வெ.சுரேஸ்குமாா் வெருகல கோட்க்கிளை தலைவர் சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்திருந்தனர்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது

 தெற்கிலே பல அதிர்வு அலைகளை ஏற்படுத்தும் பல மாற்றங்கள் இந்த தேர்தல் மூலமாக இடம் பெறவுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.எனவே    மக்களுடைய தீர்ப்பு அவர்கள் அளிக்கும் வாக்குச் சீட்டில் தான் இருக்கிறது
தெற்கிலே எவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் நிலைப்பாடான தமது நிலம் தமது பிரதே அதிகாரத்தை தாமே ஆள அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலே  அவர்கள் சிறிதளவும் விலக வில்லை. தொடர்ச்சியாக அவர்கள் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்  என்பதை இந்த உள்ளூராட்சி மன்ற  தேர்தல் கூட வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் அதிகாரப் பகிர்வு என்ற பேர்வையிலே மாயாஜால வித்தை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது.எமது மக்கள் கோருகின்ற சமஸ்டி தீர்வினைத் தான் நாங்கள் எமது கட்சியின் நிலைப்பாடாக கொண்டிருக்கின்றோம்.அதிலிருந்து நாம் ஒரு போதும் இலக மாட்டோம்.என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.