கிழக்கு மாகாண மக்களை கண்டு கொள்ளாத இந்திய அரசியல்வாதிகள்..!வட மாகாணத்தில் மாத்திரம் தானா தமிழ் மக்கள் வாழ்கின்றனர்?

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய அரசியல் வாதிகள் வட மாகாணத்துக்கு மட்டும் சென்று அங்குள்ள பிரச்சினைகளை கேட்டு அறிந்து சென்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை முன் வைப்பதற்காக பாரிய எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர். ஆனாலும் இந்திய குழுவினர் வடக்கில் மட்டும் தங்களது விஜயத்தை மேற்கொண்டு சென்றமை கிழக்கு மக்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி சீனாவின் ஆதிக்கம் அதிகளவாக காணப்படுகின்ற போதிலும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு வடக்கு மாகாணத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்ற காரணத்தினால் கிழக்கு மாகாணம் நாளுக்கு நாள் அழிந்துபோய்க் கொண்டு இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் தரப்பினர் கிழக்கு மாகாணத்தை கிழக்க்கிஸ்த்தான் ஆக்க வேண்டும் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தலைநகரம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்ற வேளையில் விஜயம் செய்த இந்திய குழுவினர் உட்பட வெளிநாட்டவர்களும் கிழக்கு மாகாணத்தை புறந்தள்ளி நடக்கின்றமே கடந்த காலங்களில் காணப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் போதும் தற்போதைய நிலவரத்திலும் பல உயிர்களை இழந்த கிழக்கு மாகாண மக்கள் இன்றுவரை பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றனர்.

இவ்வாறு இருக்கும்போது இந்த வெளிநாட்டவர்களின் நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தை புறந்தள்ளி நடப்பதாகவே காணக்கூடியதாக இருக்கின்றது .

எது எவ்வாறாக இருந்தாலும் கிழக்கை பொறுத்தவரையில் தமிழர்களின் இருப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாக மாறிக்கொண்டே இருக்கின்றது .

ஒரு புறம் சீனாவின் ஆதிக்கம் மறுபுறம் முஸ்லிம்களின் கடும்போக்கு சிந்தனைவாதம் இவற்றுக்குள் தமிழர்கள் நசுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் சர்வதேசம், மற்றும் இந்தியா கிழக்கு மாகாணத்தை புறந்தள்ளியே நடக்கின்றதை காணக் கூடியதாக இருக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.