பிரபாகரன் உயிருடன் – பழ நெடுமாறன் சர்ச்சைப் பேச்சு – சிறிலங்கா இராணுவம் உடனடிப் பதில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும், அவர் இறந்தமைக்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும், அவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

பிரபாகரன் உயிருடன் - பழ நெடுமாறன் சர்ச்சைப் பேச்சு - சிறிலங்கா இராணுவம் உடனடிப் பதில்! | Ltte Leader Prabhakaran Death Conform Sl Army

தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பழ. நெடுமாறன், இலங்கையில் ராஜபக்ஷக்களின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையும், பெரும்பான்மை மக்களின் சக்தி வாய்ந்த கிளர்ச்சியும், பிரபாகரன் வெளிவர சரியான நேரமாக அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறனின் குறித்த கருத்துக்கு சிறிலங்கா இராணுவம் பதிலளிக்கும் வகையிலே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.