யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் போதே மேலதிக 8 வாக்குகளால் இன்றைய தினம் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பின் மத்தியில் இடம்பெற்ற சபை அமர்வு - தோற்கடிக்கப்பட்டது வரவு செலவுத்திட்டம்! | Jaffna Municipal Council Budget Defeated Today

 

இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து. ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந், சு. சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபனும் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில், வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.