குறைந்த அளவில் மின்சார பாவனை உள்ளவர்களுக்கு நிவாரணம் !

இன்று முதல் அமுலாகும் வகையில் 66 சதவீதமாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொடர் மின் உற்பத்திக்கான செலவை ஈடு செய்யும் வகையிலே இந்த மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு செய்வதற்காக இலங்கை வங்கி 22 பில்லியன் ரூபாவை வழங்கவும், மக்கள் வங்கி 50 பில்லியன் ரூபாவை வழங்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய எதிர்காலத்தில் குறைந்த வருமானம் மற்றும் குறைந்தளவில் மின்சார பாவனை உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அரச கல்வி நிலையங்களுக்கு சூரியக்கதிர் கட்டமைப்புக்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.