தலதா மாளிகையில் 34 வருடங்களின் பின்னர் ‘ஜனராஜ பெரஹர’ ஜனாதிபதி தலைமையில் இடம்பெறுகிறது

கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி ‘ஜனராஜ பெரஹர’ நடைபெறவுள்ளது. 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

பெப்ரவரி 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு மகுல் மடுவ வளாகத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி, ராஜ வீதி வழியாக ஊர்வலம் இடம்பெறும் என தலதா மாளிகையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

வருடாந்த எசல பெரஹராவைப் போன்று நடன குழுவினர், யானைகள் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகளுடன் ஜனராஜ பெரஹராவை வண்ணமயமாக்க ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், கண்டி எசல பெரஹராவைப் போலன்றி, தலதா புனித நினைவுச் சின்னங்களை சுமந்து செல்லும் கலசம் ஜனராஜ பெரஹராவில் யானை மீது சுமந்து செல்லப்படாது. அதற்குப் பதிலாக இலங்கையின் தேசியச் சின்னம் ஏந்திச் செல்லப்படும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜனராஜ பெரஹர நடைபெறுவதுடன், அதனை காண வரும் பார்வையாளர்களுக்காக ஜனராஜ பெரஹர வீதியில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விக்டோரியா மகாராணியின் மகனான வேல்ஸ் பிரபு இலங்கைக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில் 1875 ஆம் ஆண்டு ஜனராஜ பெரஹர முதன்முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1954 ஆம் ஆண்டு இலங்கையின் அப்போதைய அரச தலைவரான இரண்டாம் எலிசபெத் மகாராணி இந்த நாட்டிற்கு விஜயம் செய்தபோதும் ஊர்வலம் நடத்தப்பட்டது. ராணி ஜனராஜா பெரஹரவை பத்திரிப்புவவில் இருந்து பார்த்தார். 1981 ஆம் ஆண்டில், இதேபோன்ற ஊர்வலம் நடைபெற்றது, மேலும் ராணி இரண்டாம் எலிசபெத், பிரதான முற்றமான மகா மலுவாவில் கட்டப்பட்ட ஒரு விசேட டையில் இருந்து ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.