இலங்கைக்கு நிவாரணம்?

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் ஜி20 குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாடு இன்று (22) ஆரம்பமானது.

தற்போது ஜி20 குழுவின் தலைமை இந்தியா வசம் உள்ள நிலையில் இந்த மாநாடு பெங்களூரில் வரும் 25ம் திகதி வரை நடைபெற உள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இந்த மாநாட்டில் பரிசீலிக்கப்படவுள்ளது.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் தடையாக உள்ள விடயங்கள் இந்த மாநாட்டின் போது பரிசீலிக்கப்படவுள்ளதுடன், சீனா உள்ளிட்ட இந்நாட்டுக்கு கடன் வழங்கும் நாடுகளும் இந்த சந்திப்பில் இணையும் என எதிர்ப்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மாநாட்டுடன், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா, சீனா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளின் இணையவழி கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடன் மறுசீரமைப்புக்கான பொதுவான தரநிலைகள் குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கு இதன்போது திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.