சுங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைச்சரவை குழு நியமனம்!

இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதினாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

02. இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் விசாரணைகளைத் துரிதப்படுத்தல்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற சோதனைகள், விசாரணைகள் மற்றும் ஏனைய ஏற்புடைய செயன்முறைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீண்டகாலம் எடுப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் குறித்த பொருட்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுதல் மற்றும் அழிவடைதல் உள்ளிட்ட பல பொருளாதார நட்டங்கள் ஏற்படுவதால், அத்தகைய பொருட்கள் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் கடைப்பிடிக்கப்படும் தற்போது நிலவுகின்ற செயன்முறைகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த விடயங்களை ஆராய்ந்து, தேவையாயின் சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

குழு உறுப்பினர்கள் கீழே…

நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

(மருத்துவர்) ரமேஷ் பத்திரண, பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர்

திலும் அமுனுகம, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

ஷெஹான் சேமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.