கல்முனை மாநகர சபை நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் – ஹரீஸ் எம்.பி

எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றன எனக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர் –

எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பிவருகின்றார்கள். ஆனால், மாநகர சபையில் ஒரு நிதி கையாடல் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினரான என் மீதும் சேறுபூசுகின்றார்கள். இம்மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களாயினும் அவர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

இவ்வாறான களவு, மோசடிகளை மூடி மறைக்க தான் உள்ளிட்ட ஏனைய அரசியல் தலைவர்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இந்த மோசடி மூலம் கல்முனை மக்களின் நம்பிக்கையை சிதைத்தவர்களுக்கு எதிராக தயவு தாச்சனையின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தான் பொது மக்களிடம் உறுதிபடத் தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.