யாழ் பல்கலையில் சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதே அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன் , சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இந் நிகழ்வானது Francophonie 2023 இனை கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற “Les Monsieur Monsieur” குழுவின் Larent BRUNETTI மற்றும் Mario PACCHOLI இருவரும் இணைந்து நடாத்தினார்கள் .

இந்நிகழ்வில் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் பதில் தூதுவர் Raoul imbach, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சி.ஸ்ரீசற்குணராசா , தூதரக அதிகாரிகள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இவ் இசைப்பயணத்தில் மேற்குறிப்பிட்ட பாடகர்களின் சொந்த இசையமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் பிரான்ஸ், சுவிஸ் நாட்டு இசையமைப்பாளர்களின் சிறந்த இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் இசைக்கப்படவுள்ளது.

இப்பாடல்கள் பாடகர்களின் உணர்வுபூர்வமான  ஆற்றுகை மற்றும் தனித்துவமான இயல் இசை விளக்கங்களுடன், மொழித் தடைகளை கடந்து பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க வைத்திருந்த்து.

Laurent BRUNETTI அவரின் இளம் வயது முதல் இயல் இசை துறையை தமது தொழில் வாழ்க்கையாக உருவாக்கினர். பியானோ அல்லது இணைந்த இசைக்குழுவுடன் சேர்ந்து BRUNETTI, பாடல் வரிகளுக்கு இசையமைத்தார் அத்துடன் இயலிசை ஆற்றுகைக்கான மெல்லிசை மெட்டுகளையும் வழங்குகின்றார். இதுவரை ஐந்து இசை தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர் ஏனைய இசைக் கலைஞர்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

Mario PACCHIOLI தமது இசை வாழ்க்கைப் பயணத்தை ஒரு பியானோ வாசிப்பவராகவும் ஓபெரா பாடகராகவும் 7 வயதில் ஆரம்பித்திருந்தார்.

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்துள்ளதுடன் நான்கு இசை தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர் Los Angeles நகரின் Musicians Institute of Techmology of Hollywood தமது கலைத்திறமையை மேம்படுத்தியிருந்தார். பிரான்ஸில் திரை நடிகராகவும் பயிற்சி பெற்றுள்ளார்.

இவரின் அண்மைய இசை தயாரிப்பான ” Remas” ஐ தமது தாய் மொழி Romansh ற்கு சமர்ப்பணம் செய்திருந்தார். இணைந்த இசைக்குழு, தனித்துவமான குரல் மற்றும் பாடகர் குழு ஆகியவற்றுக்காக PACCHIOLI புகழ்பெற்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.