நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை மக்கள் எதிர்க்கப் போவதில்லை – இந்திக அனுருத்த

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் எதிர்க்கப் போவதில்லை. குறுகிய நோக்கமுடைய தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

நட்டமடையும் அரச நிறுவனங்களால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள் தமது தேவைக்கான நிதிகளை சுயமாகத் திரட்டிக்கொள்ள வேண்டும், திறைசேரியை நம்பியிருக்கக்கூடாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் சுயமாக செயற்படும் சூழலை ஏற்படுத்துவதற்காகவே நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் அரச நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெறும் தரப்பினர் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் எதிர்க்கப் போவதில்லை. குறுகிய நோக்கமுடைய தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக அமைச்சு மட்டத்தில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை எதிர்வரும் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றத்தின் ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.