சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்குள் புகுந்த காட்டு யானையால் கட்டிடங்கள் சேதம் : பயிர்கள் நாசம்

சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரிக்குள் நுழைந்த காட்டு யானை கல்லூரியின் மாணவர்களால் 10 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட விவசாய பண்ணையை முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளதுடன் கட்டிடங்களுக்கும் சேதத்தை உண்டு பண்ணியுள்ளன.

இக்காட்டு யானையின் அட்டகாசத்தினால் தென்னை வாழை மரக்கறி வகைகள் உட்பட பல பலன் தரும் மரங்களை நாசமாக்கியுள்ளன.

தொழில் நுட்பக் கல்லூரியின் மதில்கள் பலவற்றை உடைத்து நாசமாக்கியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக தொழில் நுட்ப திணைக்கள உதவி பணிப்பாளர்  எஸ்.சீ.ஜெகத்துடன் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளரும் பகுதித்  தலைவருமான எஸ்.ரவீந்திரன் தொடர்பு கொண்டதையடுத்து சேத விபரங்களை திரட்டுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

யானை வெடிகளைக் கொழுத்தி யானையை மீண்டும் காட்டுக்குள் அனுப்பினர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.