இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் குறித்து மிலிந்த வலியுறுத்தல்! 

இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பொருளாதார ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் பொருளாதார ஆலோசனைக்குழுவில் உரையாற்றியபோதே உயர்ஸ்தானிகர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய – இலங்கை உறவுகள், குறிப்பாக, இருதரப்பு பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய பகுதிகள் தொடர்பாக இதன்போது அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை எதிர்கொண்ட கடும் நெருக்கடிகளின்போது, பொருளாதார மீட்சிக்காக இந்தியா வழங்கிய பங்களிப்பையும் அவர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கொள்கை வழிகாட்டுதலின் ஊடாக அந்தச் செயற்பாட்டுக்கு உதவுமாறு பொருளாதார ஆலோசனைக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார ஆலோசனைக் குழு, பொருளாதாரம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது.

இந்நிலையில் அண்மையில் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் உள்ளிட்ட பல முக்கிய இந்திய அதிகாரிகளை சந்தித்து இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.