அமைச்சரவையை விஸ்தரிப்பதற்காகவா ? சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்கியது – நாலக கொடஹேவா

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அமைச்சரவையை விஸ்தரிப்பதற்காகவா சர்வதேச நாணய நிதியம் முதல் தவணை நிதி தொகையை வழங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் உண்மை நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும் போது சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அவர்கள் கருத்துரைப்பதில்லை. இதனை பிரதான குறைபாடாகக் கருத வேண்டும்.

தேசிய கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்.இதனால் சாதாரண சேமிப்பு வைப்பாளர்கள் கூட பாதிக்கப்படுவார்கள்.

கட்சி தாவும் அரசியல் இல்லாதொழியும் வரை சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியாது. அமைச்சு பதவிகளுக்காக அரசாங்கத்துடன் இணைய ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தயாராகவுள்ளார்கள். அமைச்சரவையை விஸ்தரிப்பதற்காகவா சர்வதேச நாணய நிதியம் முதல் தவணை நிதி வழங்கியது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடும் அரசாங்கம் அமைச்சரவை மாத்திரம் விஸ்தரித்து அரச செலவுகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் முதலில் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடனும்,மக்களுக்கு எடுத்துக்காட்டாகவும் செயற்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.