நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு கலை,கலாசார நிகழ்வுகள்…

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு 23.04.2023 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கமு சிவசக்தி வித்தியாலயத்தில் நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை அதிபர் திருமதி. ஜெனிதா மோகன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

மேலும் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக செயற்பாட்டாளர்களது சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. இதில் சாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் சீதா விவேக அவர்களும் சாயி கருணாலய அமைப்பின் உறுப்பினர்களான ருத்திரன் ஐயா, வேல்சாமி ஐயா, ஆறுமுகம் வேலாயுத பிள்ளை என்போரும் கலந்து கொண்டனர். மேலும் சமூக ஆர்வலரான நாகராஜா சனாதனன் கலந்து இந் நிகழ்வில்ஆன்மீக அதிதியாக ஸ்ரீ கணேசராலய பிரதம குரு சிவஸ்ரீ சு. சுதர்சன் குருக்கள் அவர்களால் ஆசியுரை வழங்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர், கருணை உள்ளம் அறக்கட்டளை ஸ்தாபகர் அ.றஜீதன் மற்றும் வி.சேதுமாதவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் போட்டிகளில் பங்குபற்றிய
அறநெறிப்பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் உருத்திராட்சமும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

அறநெறிப்பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அறநெறிப்பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் அவர்கள் தங்களது வாழ்வில் ஒழுக்க நெறியினை கற்றுக்கொள்ள முடியும், தாய் தந்தையறை வணங்க வேண்டும், கலை, கலாசார நல்ல பண்புகளை கற்றுக்கொள்ளும் இடம் அறநெறிப்பாடசாலை ஆகும் இதனை பெற்றோர்கள் உணர்ந்து
அறநெறிப் பாடசாலைக் களுக்கு அனுப்புங்கள் என அனைவரிடமும் கொட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய மற்றும் பத்திரகாளி அம்மன் ஆலய தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், பல்வேறு உதவிகளை வழங்கிய இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களுக்கும் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், பெற்றோர், கமு/கமு சிவசக்தி வித்தியாலய ஆசிரியர் பிரதீபா பிரபாகரன், கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுஜித்ரா ஆகியோருக்கும் இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை அதிபர் திருமதி. ஜெனிதா மோகன் அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.