இரண்டாங்கட்ட டெங்கு ஒழிப்பு கல்முனையில் வேலைத் திட்டம்!
ஜனாதிபதியின் டெங்கு காட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பையால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாங்கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் நேற்று கல்முனை வடக்கு பிரதேசத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யு. எம். இஸ்ஹாக் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மணச்சேனை ஆகிய கிராமங்களில் இந்த சிரமதானப் பணி சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவின் சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ. எம்.அதுகம் உட்பட உதவி மேற்பார்வை உத்தியோகத்தர்களான ஈ.இராகவான், ஆர். லிங்கராஜா, எம். எம். எம். றிஸ்வான் ஆகியோரும் மாநகர சபை சுகாதார ஊழியர்களும் கலந்துகொண்டனர். மாநகர ஆணையாளரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பெருந்தொகையான டெங்கு பரவுவதற்கு காரணியான கழிவு பொருள்கள் சேகரிக்கப்பட்டன.













கருத்துக்களேதுமில்லை