முப்பெருந் தமிழ் விழா யாழில் சிறப்புற நடந்தது!
யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தை முன்னிட்டு முப்பெருந்தமிழ் விழா இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இந்த விழப இடம்பெற்றது.
பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல்வேறு துறைகளிலும் சேவைகள் செய்த பலருக்கும் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.












கருத்துக்களேதுமில்லை