ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு!

சண்முகம்  தவசீலன்

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.

பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நவதள இராஜகோபுரப் பணிகள் மற்றும் ஆலய புணரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஆலயத்துக்கும் நவதள இராஜகோபுத்துக்கும்  மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.

கடந்த 26.05.23 அன்று கிரியைகள் ஆரம்பமாகி சிவாச்சாரியார்களால் விசேட யாகபூசைகள் நடத்தப்பட்டு 29,30,31 ஆம் திகதிகளில்  எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது மூன்று நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து எண்ணைய்க்காப்பு சாத்தினர்.

இதனைத் தொடர்ந்து 01.06.2023 அன்று  ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் சுயம்பு லிங்கத்துக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நவதள
ராஜகோபுரத்துக்கும் 11.10 மணிதொடக்கம் 12 மணிவரையுள்ள சிம்மலக்கன சுபநேரத்தில் சிவாச்சாரியார்களின் மந்திர பாராயணங்களுடன் மகா கும்பாபிசேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகைதந்து கும்பாபிஷேகப் பெருவிழாவை கண்டு எம்பெருமானின் ஆசியையும் பெற்றுச்சென்றுள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.