புதிய நாடாளுமன்ற செயலாளர் நாயக நியமனம் இளைஞர்களுக்கு உத்வேகம்! அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பாராட்டு

பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளமை இளைஞர் யுவதிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்இ நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள குஷானி ரோஹணதீரவை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் புதிய நியமனம் தொடர்பில் வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும்இ அமெரிக்கத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்துடன் தொடர்ந்து ஒத்துழைப்புடன் பணியாற்ற  தாம் விரும்புவதாகவும் நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு எப்பொழுதும் தமது ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் வகிபாகம் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழுக்கள் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டினார்.

ஆட்சிமுறையில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் பாலின சமத்துவம் மற்றும் வலுப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை அமைப்பதற்கான பிரேரணை என்பன சம்பந்தப்பட்ட தரப்புடன்  இணைந்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹண தீரவின் இந்த நியமனம் பல்வேறு இளைஞர் யுவதிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவம் மற்றும் சாத்தியமான ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.