பதவிக்காக வெளியிடும் அலிசப்ரியின் கருத்து முஸ்லிம் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தும்! கஜேந்திரன் எம்.பி. ஆதங்கம்

சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுத்துவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்திலிருந்து கிட்டும் ஒரு; பதவிக்காக அவர் வெளியிடுகின்ற இத்தகைய கருத்துக்கள், சிறுபான்மையின தமிழர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தும்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வையும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையுமே கோருகின்றார்கள். இலங்கையின் ஒற்றையாட்சி முறை மற்றும் அதன்கீழ் நிகழ்ந்த அடக்குமுறைகளின் விளைவாகவே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எனவே அமைச்சர் அலி சப்ரி தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பேசுவதைவிடுத்து ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் உண்மையைப் புரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் பேசவேண்டும். –  என்று வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.