அணுசோதனை – தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலர் – நஸீர் சந்தித்து பேச்சு!

அணுசோதனை – தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் டாக்டர் ரொபட் ப்ளோவட் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமத் உடனான உயர்மட்ட சந்திப்பபொன்று சுற்றாடல் அமைச்சில் நேற்று (திங்கட்கிழரத) இடம் பெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்கவும் கலந்து கொண்டார்.

பரந்த தொழில் நுட்பம் –  விஞ்ஞானம்  என்பவற்றை பரந்த அடிப்படையில் சகலருக்கும் பயனளிக்கும் விதத்தில் உறவை முன்னெடுப்பது தொடர்பாக அமைச்சர் வலியுறுத்தியதுடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் அவசியம் தொடர்பாகவும் விளக்கினார்.

1996 இல் ஒக்ரோபர் 24 இல் அணுசோதனை தடை ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டது.

2000 ஆம் ஆண்டில் தொழிநுட்ப வசதி தொடர்பான ஒப்பந்தத்தின் பின்னர் அதன் அடிப்படையிலான துணை நில அதிர்வு நிலையமொன்று பல்லேகளையில் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட், அணு இல்லாத உலகம் என்ற இலக்கை அடைவதற்கு எமது நாடு பூரண ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் செய்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

புவியியல்  ஆய்வு சுரங்கப் பணியகம் என்பனவும் இத்திட்டத்தில் அமுல்நடத்தப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.