கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகனாலய பொதுக்கூட்டம் பெருந்திரலாணவர்கள் பங்கேற்பு….

உகந்தை முருகன் ஆலய பொதுக்கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் திரு.N. நவணிதராசா அவர்களின் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் லகுகல கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு ஆன்மிக அதிதியாக உகந்தை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராமன் குருக்கள், பொத்துவில் விகாராதிபதி, பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் பொத்துவில் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி C.I.கமால் செனவரத்தின, S. I. நவரெத்தினம் மற்றும்
,அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம், அம்பாறை மாவட்ட பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் பிரதம அதிதியாக வருகை தந்த வே. ஜெகதீசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அம்பாறை மவட்டங்களில் 21 ஆலயங்கள் நீதி மன்றங்களில் வழக்கு தொடறப்பட்டிருக்கின்றது.
மேலும் அனைவரும் ஒன்றாக இணைந்து பாணமை தொடக்கம் கழுவாஞ்சிகூடி வரையிளானவர்கள் வருகை தந்திருந்தனார். இந்த தேசத்து ஆலயத்தினை சிறப்பான முறையில் இந்த நிர்வாகத்தினை திருப்பியாக கொண்டு செல்லவேண்டும் என கருத்துறை வழங்கினார். மேலும் பிரதேச செயலாளறினால் சமூகப்பணியான ஏழைகளின், மருத்துவ சேவை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், இளைஞர்களின் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல், வருடத்தில் ஒரு முறை ஏழைகளின் வீடு அமைப்பதற்கான உதவியினை வழங்குதல், அறநெறிப்பாடசாலை முன்னெடுத்தல் போன்ற சமூக செய்யற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும், யாப்பு விதிகள் சம்பந்தமாகவும் அதன் சட்டங்கள் பற்றியும் வருகை தந்திருந்த அனைவருக்கும் தெளிவு படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தெரிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகனாலய பொதுக்கூட்டம். பெருந்திரலாணவர்கள் பங்கேற்ப்பு….

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.